சட்டவிரோதமாக மற்றும் முறையற்ற வகையில் நிதி சேகரித்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன குறித்து முன் எடுக்கப்படும் விசாரணையை துரிதப்படுத்துமாறு கோட்டை நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு ரகசிய காவற்துறையினருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரகசிய காவற்துறையினருக்கு மோசடி எதிர்ப்பு முன்னணியினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இன்று இடம் பெற்ற வழக்கு விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சஜின் வாஸ் குணவர்த்தனக்கு சொந்தமான 21 நிறுவனங்களின் வருமானம் தொடர்பாக ரகசிய காவற்துறையினருக்கு உடனடியாக அறிக்கை வழங்குமாறு கோட்டை நீதவான் இதன்போது, தேசிய வருமானவரி திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.