புதிய தேர்தல் திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகரிக்கப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
புதிய தேர்தல் திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகரிக்கப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 238 ஆக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது நாடாளுமன்றத்தில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
புதிய தேர்தல் முறைமையின் படி, யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 11ஆகவும், கண்டியில் இருந்து தெரிவாகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 13ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
அதேநேரம் சில பிரதேசங்களில் சில தொகுதிகளில் இரட்டை ஆசன முறைமையில் எட்டு உறுப்பினர்களுக்கு மேலதிகமாக தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இவற்றின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 238ஆக அதிகரிக்கவுள்ளது.
எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரிக்கும் என்று கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.