சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ளமையினால் புதன் கிரகம், பூமியின் வெப்பத்தை போல 11மடங்கு அதிகமாக இருக்கும். மேலும் மதியம் என்பது சுமார் 3 மாதத்திற்கு இருக்கும். வெள்ளிக்கு செல்லலாம் என்றால் அது அதைவிட மோசமான பருவநிலையை கொண்டுள்ளது. அங்கு காற்றழுத்தம் மிக அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
ஆளில்லாத விண்கலம், வெள்ளியில் போய் இறங்கினாலும் கடும் அழுத்தத்தால் விண்கலம் தூளாக நொறுங்கிவிடும். வெப்பம், காற்றழுத்தம் குறைவான கிரகத்திற்கு செல்லலாம் என்று செவ்வாய்க்கு அப்பால் உள்ள வியாழன், சனியை ஆராய்ந்தால் அவை பனிக்கட்டி உருண்டைகளாக இருக்கின்றன. ஆளில்லா விண்கலம் அங்கு சென்று இறங்கினால் அவை புதைசேற்றுக்குள் சிக்கியது போல புதைந்து விடும்.
இதனாலேயே , சூரியமண்டல கிரகங்களில் செவ்வாய் மட்டுமே நம்மை கவர்ந்து இழுக்கிறது. அதனால்தான் விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளாக செவ்வாயை நோக்கி, அதிகமாக ஆளில்லா விண்கலன்களை அனுப்பி, மனிதன் அங்கு வாழ்வதற்கான சூழ்நிலைகளை ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
பூமி தற்போது உள்ள நிலைக்கு கட்டாயமாக இன்னொரு கிரகத்தில் வாழ்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது மிக முக்கியமானதாகும்.