நயன்தாராவுடன் காதலை முறித்துக்கொண்ட பிரபுதேவா, பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை தீவிரமாக காதலிப்பதாக மும்பை வட்டாரங்களில் கிசுகிசு பரவியுள்ளது. தமிழ் இயக்குனர் ஒருவர், இந்தியில் அதிக சம்பளம் வாங்குபவராக உயர்ந்துள்ளதை ஜீரணிக்க முடியாத சிலர், இதுபோல் ஆதாரமற்ற செய்திகளைப் பரப்பி வருவதாக பிரபு தேவா தரப்பு கூறுகிறது.
திருமணம் செய்து பின் அவரை நடிகை நயன் மேலுள்ள காதலால் விவாகரத்து செய்துவிட்டு, நயனை உருகி உருகி காதலித்தார் நடன இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா.
என்ன ஆனதோ? யார் கண்பட்டதோ? இருவருக்கும் இடையிலான காதல் இரண்டு துண்டாகியது. இனி நீ யாரோ நான் யாரோ ரேஞ்சில் இருவரும் பிரிந்து போனார்கள். பார்த்துக் கொள்ளக் கூட
விரும்பவில்லை. பிரபுதேவாவின் பெயரை பச்சை குத்தியிருந்த நயன் அதனை அளித்து விட்டார். மீண்டும் தனது நடிப்புமீது கவனம் செலுத்த ஆரம்பித்து அம்மணி இப்பொழுது ரொம்ப பிசி.
இவை கடந்த காலங்கள். இப்பொழுது சூடான செய்தி என்ன தெரியுமா? நயன் மீதான காதலை உடைத்துக் கொண்ட பிரபுதேவா, ஹிந்தியில் கலக்கும் முன்னனின் நடிகை தமிழிலும் லிங்காவில் வந்தவர் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை காதலிக்கிறார் என்பதுதான்!
நடிகரின் தரப்பு தகவலை மறுத்திருந்தாலும், என்னை ஊற்றாமலா புகையும் என்பது கோடம்பாக்கத்து கணிப்பு. இப்படியும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் !! ஹீ ஹீ ஹீஈ
-கோடம்பாக்கக் குருவி-