2,449 Views
முதல்முதலாகக் கமலுடன் இந்தப் படத்தில் கைகோர்த்திருக்கும் இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்தின் பாடல்கள் பற்றிச் சிலாகிக்கிறார்.
“ரசிகர்கள் பார்வையில் முத்தத்துக்கு அடையாளமானவர் கமல் என்பதால் ‘சிங்கிள் கிஸ்’ பாடலை அவருக்கென்றே உருவாக்கினோம். இதில் அவரது ஃபேவரிட்டான நடனமும் பேசப்படவேண்டும் என்பதால் நாடன இயக்குநர் ஷோபியும் நானும் எங்களது அதிகபட்ச உழைப்பைக் கொட்டி உருவாக்கிய பாடல் இது. பாலியில் இருந்து தருவிக்கப்பட்ட வித்தியாசமான இசைக்கருவிகளைக் கொண்டு இசைத்திருப்பதால் பாடல் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.
‘காதலாம் கடவுள் முன்…’ ஆன்மாவின் ஏக்கத்தையும், காதலின் வலியையும் உணரவைக்கும் பாடலாகவும் அமைந்திருக்கிறது. இந்த எல்லாப் பாடல்களிலும் என் விருப்பத் தேர்வான பாடம் இரணியன் நாடகப் பாடல்தான். அதன் காட்சி அமைப்புகள் அற்புதப் பதிவாக அமைந்திருக்கின்றன. இந்தப்பாடல் தியேட்டர்களில் திருவிழா கொண்டாடப் போவது நிஜம்..!
கொண்டாட்டத்தைக் காண இன்னும் 01 நாள்தான் இருக்கின்றன ஜிப்ரான்..!
=== CASTRO RAHUL ===