Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
14
இலங்கை மற்றும் ஜப்பான் இரு தரப்பு கலந்துரையாடலில்

japan vs sl - இலங்கை மற்றும் ஜப்பான் இரு தரப்பு கலந்துரையாடலில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,748 Views
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜப்பான்  பிரதமர் சின்சோ அபேயிற்கு இடையிலான இரு தரப்பு கலந்துரையாடல் தற்போது ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



குறித்த கலந்துரையாடல் அந்த நாட்டு பிரதமர் காரியாலயத்தில் இடம்பெறுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் டோக்கியோவில் உள்ள நவீன கழிவு முகாமைத்துவ நிலையத்தை பார்வையிட்டார்.

சுமார் 9.3 மில்லியன் மக்கள் வாழும் டோக்கியோ நகரில் நாளாந்தம் 11 ஆயிரம் மெற்றிக் தொன் திண்மக் கழிவுகள் வெளியேற்றப்படுவதுடன், இவற்றை முகாமைத்துவம் செய்வதற்காக இது போன்ற 23 மத்திய நிலையங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி அவர்கள், பார்வையிட்ட சினகாவாவில் உள்ள திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தில் சுமார் 60 மெற்றிக் தொன் திண்மக் கழிவுகள் நாளாந்தம் முகாமைத்துவம் செய்யப்படுகின்றன.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சூழல் நட்புடைய வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், அந்த நடவடிக்கைகளை ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.

கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளுக்கு மேலதிக பெறுபேறாக உற்பத்தி செய்யப்படும் அனல்மின் மின்சக்தியாக மாற்றப்படுவதுடன், இந்த மின்சக்தி திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தின் பயன்பாட்டுக்காக பெற்றுக்கொள்ளப்படுவதுடன், எஞ்சிய தொகை தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் திண்மக் கழிவு பிரச்சினையை தீர்ப்பதற்கு இத்தகைய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயவுள்ளதாகவும், இதற்கு ஜப்பானின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து கவனம் செலுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தின் தலைவரினால் இந்த நிலையத்தின் பணிகள் குறித்து ஜனாதிபதி அவர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு விரிவாக விளக்கப்பட்டது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷு மாரசிங்ஹ  ஆகியோரும் இந்கிழ்வில் கலந்துகொண்டனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top