Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
01
மேதினம் இன்று

Today marks labor's day - மேதினம் இன்றுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,849 Views
உலகமெங்கும் இன்று மே தினம் எனப்படும் தொழிலாளர் தினம் அனுஸ்ட்டிக்கப்படுகிறது.
18ஆம் நூற்றாண்டு காலப்பகுதயில், 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டமைக்கு எதிராக ஏற்பட்ட புரட்சியே மேதின உருவாக்கத்தின் ஆரம்பமாக இருந்தது.

குறிப்பாக இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் இதில் முக்கிய பங்கினை வகித்தது.

சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போரட்டங்களை நடத்தியது. 

அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

அதேநேரம், 1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர்.

இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 

1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 

இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.

1856இல் ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். 

இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.

ரஷ்யாவை ஆட்சி செய்த சார் மன்னரால் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள்.

இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 

1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.

தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டிருந்தது.

அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். 

அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. 

இந்த இயக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தியது.

1886ம் ஆண்டு மே முதலாம் திகதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. 

இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. 

இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். 

தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்காவின் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. 

வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. 

மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

மே 3, 1886ம் ஆண்டு சிக்காக்கோவில் நடபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது களவரம் ஏற்பட்டது. 

இதன் போது கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

இந்நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது. 

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் "சர்வதேச தொழிலாளர் நாடாளுமன்றம்; கூடியது.

இதில் 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் போராட்டத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

இதுவே பின்னர் மே ஒன்று தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டது. 

இந்த போராட்டங்கள் அனைத்தையும் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்தியுள்ளனர்.

ஆனால் இப்போதைய காலப்பகுதியில் தொழிலாளர்கள் ஒன்றுசேரவிடாமல் தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் தனித்தனியே கூட்டங்களை நடத்தி, அவர்களின் ஒற்றுமையை சிதைப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. 

இலங்கையிலும் இன்றையதினம் தொழிலாளர்கள் மேதின நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர். 

சுதந்திரமான வேலைத்தளமும், தொழில் உரிமைகளும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி விடுத்துள்ள மேதின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். 

அதேநேரம் ஜனநாயகத்தை அடக்கி ஆண்ட ஏகாதிபத்திய ஆட்சி கவிழ்க்கப்பட்டு தொழிலாளர் வர்க்கம் தற்போது சுதந்திர காற்றை சுவாசிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது வாழ்த்துக்கு குறிப்பில் தெரிவித்துள்ளார். 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top