Hiru Shakiya Sinha Mangalaya - ஆயிரக் கணக்கான மக்கள் திரண்ட ஹிரு ரி.வி. மற்றும் ஹிரு எப்.எம்.மின் ஷாக்கியசிங்க சமய நிகழ்வுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,981 Views
விசாக பண்டிகையை முன்னிட்டு ஹிரு ரி.வி. மற்றும் ஹிரு எப்.எம். என்பன ஏற்பாடு செய்த ஷாக்கியசிங்க சமய நிகழ்வு கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் இடம்பெற்றது. ஹிரு ஷாக்கியசிங்க நிகழ்வில் நேற்று அதிகாலை தொடக்கம் பல்லாயிரக்கணக்கான பௌத்த மத பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பௌத்த தர்மத்தின் நிலைப்பாட்டிற்காக எந்த தருணத்திலும் முன்னிலை வழங்கும் ஹிரு ரி.வி. மற்றும ஹிரு எப்.எம் என்பன இந்தமுறையும், சமய பெரியார்களுக்கு நன்கொடை மற்றும் சமய அனுஷ்டானங்களுக்கு அனுசரணை வழங்கியிருந்தன.
இதேவேளை. ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வலையமைப்பின் தலைவர் ரேனோ சில்வாவின் எண்ணக்கருவுக்கு அமைய, கிரிவெஹெர தூபிக்கு மின்னொளி விளக்குகளை ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது.
இதுதவிர, ஒரு லட்சம் விளக்குகளும் விகாரை வளாகத்தில் ஏற்றப்பட்டதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.
வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமம் கிரிவேஹர பிரதேசத்தை மையப்படுத்தி இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மத விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கும் ஹிரு டீ.வி, ஹிரு.எப்.உம் இந்த முறை பல மத வேலைதிட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.
அன்னதானம், போதனை உள்ளிட்ட பல விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கும் வண்ணம் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆசிய ஊடக வலைமைப்பின் தலைவர் ரேனோ சில்வாவின் எண்ணக்கருவிற்கு அமைய, கிரிவேஹர வளாகத்தில் ஒரு லட்சம் விளக்கு ஏற்றும் பூஜையும் நேற்றுறு பிற்பகல் இடம் பெறவுள்ளது.
ஆசிய ஊடக வலைமையப்பின் தலைவர் ரேனோ சில்வாவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.