Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
06
அவுஸ்திரேலியாவில் விளையாடவுள்ள சங்கா !!!

Sanga to play in Australia - அவுஸ்திரேலியாவில் விளையாடவுள்ள சங்கா !!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,959 Views
உலகக்கிண்ணத்துடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த இலங்கையின் கிரிக்கெட் நட்சத்திரம் குமார் சங்கக்கார இப்போது இங்கிலாந்து பிராந்திய அணியான சரே அணிக்காக முதற்தரப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
 
 

இம்முறை IPL போட்டிகளில் விளையாட எந்த அணிக்கும் அழைக்கப்படாத சங்கக்கார ஏற்கெனவே சர்வதேச T20 போட்டிகளிலிருந்து இலங்கையின் உலக T20 வெற்றியுடன் தனது நண்பர் மஹேலவுடன் சேர்ந்து ஓய்வை அறிவித்திருந்தார்.
 
உலகக்கிண்ணப் போட்டிகளில் 4 சதங்களை தொடர்ச்சியாக அடித்து சிறப்பான ஓட்டக்குவிப்பில் இருந்த சங்கா, சரே அணிக்காகவும் ஓட்டங்களைக் குவித்து வருகிறார்.
 
இந்த சிறப்பான வாய்ப்பை பயன்படுத்த விரும்பியுள்ள அவுஸ்திரேலிய Big Bash League அணியான Hobart Hurricanes - ஹொபார்ட் ஹரிகேன்ஸ் சங்கக்காராவை இந்தப் பருவகாலத்துக்கு தனது அணிக்காக ஒப்பந்தம் செய்துள்ளது.
மிகப் பெருமையான விதமாக இன்று இந்த அறிவித்தலை இன்று Hobart Hurricanes தனது Facebook மூலம் அறிவித்தது.






இதையடுத்து ஏராளமான வாழ்த்துச் செய்திகள் சங்காவுக்கும் Hobart Hurricanes அணிக்கும் கிடைத்தவண்ணம் இருக்கின்றன.
 
அவுஸ்திரேலியாவின் T20 லீக் போட்டிகளான Big Bash League போட்டிகளில் ஏற்கெனவே இலங்கையின் முரளிதரன், மாலிங்க, திசர பெரேரா, ஜீவன் மென்டிஸ் போன்ற வீரர்கள் விளையாடியிருந்தாலும் சங்கக்கார அவுஸ்திரேலிய BBL அணிக்காக விளையாடும் முதல் தடவை இதுவாகும்.
 
அவுஸ்திரேலியாவிலும் தொடரப்போகும் சங்காவின் சாம்ராஜ்யம்.
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top