Rally for Mahinda - மஹிந்தவிற்கு ஆதரவான கூட்டத்தில் பலர் பங்கேற்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,592 Views
தாய்நாட்டை பாதுகாப்போம் - மஹிந்தவுடன் மீளெழுவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வலியுறுத்தும் நான்காவது கூட்டம் குருநாகலையில் இடம் பெற்றது. குருநாகலை வெலகெதர விளையாட்டு திடலுக்கு முன்பாக இடம் பெற்ற இந்த கூட்டத்தில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக முன்னாள் அமைச்சர் டி.பி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில், தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவங்ச, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ கரலியத்த, சாலிந்த திசாநாயக்க, ரீ.பி ஏக்கநாயக்க, நில்வலா விஜேசிங்ஹ, கீதாஞ்சன குணவர்த்தன, ரஞ்சித் சொய்சா, ஜானக வக்கும்புர, மனுச நாணயக்கார, நிஷாந்த முத்துஹெட்டிகம, அருந்திக பெர்ணாண்டோ, சரண குணவர்த்தன, ரோஹன திசாநாயக்க, சரத் வீரசேகர, ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதுதவிர, காமினி லொக்குகே, மஹிந்தானந்த அலுத்கமகே, டளஸ் அளகப்பெரும, ஜீ.எல் பீரிஸ், வீரகுமார திசாநாயக்க, ஜயந்த கெட்டகொட, பந்துல குணவர்த்தன, ரோஹித்த அபேகுணவர்த்தன, குமார வெல்கம ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.