12,133 Views
செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார் த்ரிஷா. சம்பளம் கட்டுப்படியாகவில்லை…. கமல் படத்தில் நடிப்பதால் கால்ஷீட் இல்லை…
என்றெல்லாம் த்ரிஷாவின் விலகலுக்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன திரைத்துறையில். இன்னொரு பக்கம், ஒன்றையும் காதில் கிசுகிசுக்கிறார்கள். பொதுவாகவே தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளிடம் அதிக நெருக்கம் காட்டுவார் சிம்பு. த்ரிஷாவும் இதில் விதிவிலக்கில்லை.
ஏற்கனவே அலை, விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்தபோது இருவரும் படு நெருக்கமாக ‘பழகினார்கள்’. தற்போது வருண்மணியனின் பிரிவுக்குப் பிறகு மீண்டும் ‘சிங்கிளாகி’விட்டார் த்ரிஷா. இதை சாதகமாக எடுத்துக் கொண்டு ஏற்கனவே சிங்கிளாக இருக்கும் சிம்பு, த்ரிஷாவினை வளைக்க ஆரம்பித்துவிட்டார்
அவருடைய தொந்தரவு அதிகமானதால்தான் செல்வராகவன் படத்திலிருந்து விலகிவிட்டார் என்றும் தகவல் பரவியது. சிம்பு, செல்வராகவனுக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தில் திரட்டிய தகவலோ முற்றிலும் வேறாக இருக்கிறது. அதாவது சிம்பு – செல்வராகவன் இணையும் படத்துக்கு இதுவரை தயாரிப்பாளர் கிடைக்கவில்லையாம்!
சிம்புவை வைத்து படம் எடுப்பது மட்டுமல்ல, செல்வராகவனை வைத்து படம் தயாரிப்பதும் மலை உச்சியிலிருந்து குதிப்பதற்கு சமமானதுதான். கடந்த காலங்களில் இவர்கள் இருவரையும் வைத்து படம் எடுத்தவர்களுக்கு ஏற்பட்ட கதியை கண்ணால் பார்த்தனர் படத்துறையினர். அதனாலோ என்னவோ சிம்பு – செல்வராகவன் இருவரையும் வைத்து படம் எடுக்க எந்தத் தயாரிப்பாளரும் முன்வரவில்லை.
குறிப்பபாக, இரண்டாம் உலகம் என்ற படத்தை எடுத்த பிறகு திரை உலகத்தினரால் ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்பட்டார் செல்வராகவன். இந்நிலையில், தன் அண்ணனுக்கு ஏற்பட்டநிலையை எண்ணி வருத்தப்பட்ட தனுஷ், தன் ‘மாலை நேரத்து நண்பரான’ சிம்புவிடம் சொல்லி செல்வராகவனுக்கு ஒரு படம் பண்ணிக்கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அதன்படி தொடங்கப்பட்ட படம் தான் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம். செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக மாறி மாறி ட்விட்டரில் கூவினார்கள். அப்படத்தின் போட்டோஷூட் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டு அந்த புகைப்படங்களை மீடியாவில் கசியவிட்டனர். இவ்வளவு நடந்த பிறகும், சிம்பு – செல்வராகவன் இணையும் படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. தயாரிப்பாளரை அமுக்கிப்போடுவதற்காகவே போட்டோஷூட் நடத்தி உள்ளனர்.
அப்படியும் தயாரிப்பாளர் அகப்படவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, இந்த செய்தியின் தலைப்புக்கு வருவோம்.
தயாரிப்பாளரே கிடைக்காத படத்துக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டு, வீட்டில் உட்கார்ந்திருப்பதைவிட, தன் அப்பாவின் அண்ணன் வயசு கொண்ட கமலுக்கு ஜோடியாக நடித்தாலும் பரவாயில்லை… என்று சிம்பு படத்துக்கு ஒதுக்கிய கால்ஷீட்டை கமல் படத்துக்குக் கொடுத்துவிட்டார் த்ரிஷா.
=== CASTRO RAHUL ===