ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக எதிர் கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
தமது நாடாளுமன்ற உறுப்பினர்களை, பொது உடமைகள் சட்ட மூலத்தின் கீழ் முறைகேடு செய்தாக குற்றம் சுமத்தி கைது செய்து விளக்கமறியலில் தடுத்து வைக்கும் நடவடிக்கைகள் அண்மை காலமாக இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், இவ்வாறான நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.