வடகொரிய பாதுகாப்பு அமைச்சர் ஹியோன் யோங்-சோல் (Hyon Yong-chol) இற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தென்கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியிடம் விசுவாசமற்று நடந்து கொண்டதாக தெரிவித்தே அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தென் கொரியாவின் தேசிய உளவுத்துறை நிறுவனத்தின் துணை இயக்குனரான ஹான் கி பியோம் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி, ஹியோனின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கொரிய உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த தண்டனை நிறைவேற்றத்தை, வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் நேரில் பார்த்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, மக்கள் ஆயுத படையின் அமைச்சராக நியமிக்கப்பட்ட ஹியோன், ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்று தெரிவித்து கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.