2,058 Views
இலங்கையின் பிரபல கழகங்கள் மற்றும் இலங்கையின் தேசிய ரக்பி அணியை பிரதிநிதித்துவப்படுத்திய தாஜூதீன் கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி அதிகாலை விபத்தொன்றில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அம் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தாஜூதீனின்மரணம் தொடர்பில் இடம்பெற்ற பரிசோதனை அறிக்கை மற்றும் படங்களை ரகசிய பொலிஸின் கொலைகள் தொடர்பான விசாரணைப் பிரிவுக்கும் , நீதிமன்றத்துக்கும் ஒப்படைக்குமாறு நீதிமன்ற வைத்திய அதிகாரிகள் சிலருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.
இம் மரணம் தொடர்பில் நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு குறித்த ஆதாரங்கள் அவசியமாவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.