ஒரே நேரத்தில் அஜித்,விஜய்,சூர்யாவுடன் ஸ்ருதி
ajith #vijay #surya #sruthi - ஒரே நேரத்தில் அஜித்,விஜய்,சூர்யாவுடன் ஸ்ருதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
சூர்யா நடித்த 'மாஸ்' திரைப்படம் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது. வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா, பிரேம்ஜி அமரன், உள்பட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் ரிலீசான இந்த படத்தின் பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதால் படத்தின் மீதான் எதிர்பார்ப்பு மிக அதிகமாகியுள்ளது.
இந்நிலையில் சூர்யா தற்போது விக்ரம் குமாரின் இயக்கத்தில் '24' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் வரும் செப்டம்பருக்குள் முடித்துவிட விக்ரம் குமார் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தை முடித்தவுடன் சூர்யா, ஹரி இயக்கவுள்ள 'சிங்கம் 3' படத்தில் நடிக்கவுள்ளார்.
சிங்கம் 3' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் முதல் இரு பாகங்களில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி நடித்தார் என்பது அனைவரும் தெரிந்ததே.ஆனால் மூன்றாம் பாகத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே ஸ்ருதிஹாசன் விஜய்யின் 'புலி', அஜீத்தின் 'தல 56' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சூர்யாவுடனும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் இளம் இசைப்புயல் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. சூர்யா, மற்றும் ஹரியுடன் அனிருத் முதல்முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் '24' வரும் தீபாவளி திருநாளிலும், சிங்கம் 3' வரும் 2016ஆம் ஆண்டின் பொங்கல் திருநாளிலும் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-கோடம்பாக்கக் குருவி-