சிவகார்த்திகேயன் நடித்துள்ள Mr லோக்கல் திரைப்படம் மே 01 திகதி வெளிவரவுள்ளது அஜித்தின் பிறந்தநாளான அன்று தலையின் படம் வெளிவருமென எதிர்ப்பார்த்த ரசிகர்கள் சிவாவை தூற்றினார்கள் ஆனால் அஜித்தின் படம் தாமதமாகும் என்பதால் சிவா ரசிகர்கள் செம்ம குஷியில் இருக்கின்றார்கள்.
Mr . லோக்கல் படத்தை அடுத்து ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK-14 படத்தின் படப்பிடிப்புகள் நடைப்பெற்று வருகிறது இந்த நிலையில் இரும்புத்திரை பட பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும், SK-15 படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகளும் இன்னொரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இரும்புத்திரை படத்திற்கு இசை அமைத்த யுவன் சங்கர் ராஜாவே தான் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு முதல் முதலாக இசை அமைக்கும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார். இந்த தகவலை யுவன் சங்கர் ராஜா நேற்று ஒரு ட்வீட்டின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்சன், இவானா ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதெல்லாம் இப்படி இருக்க சிவாவின் ரசிகர்கள் sk 15 இற்கு நாயகன் என பெயரிட்டுள்ளதோடு அதற்கு 1st லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்