ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கும் மார்ச்சில் திருமணம் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மார்ச் 10-ல் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஆர்யா தனது நெருங்கிய நண்பர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். ஆர்யாவின் நண்பர்கள் பட்டியலில் நடிகர் விஷால் உள்ளார்.
விஷாலை நேரில் சந்தித்த ஆர்யா தனது திருமண அழைப்பிதழை கையளித்துள்ளனர். ஆர்யா நேரில் சென்று அழைப்பு வைத்த தகவலை நடிகர் விஷால் அவரது ட்விட்டரில் புகைப்படத்தை வெளியிட்டு பதிவொன்றையும் தந்துள்ளார்.
அதில், எனக்கு நெருக்கமான புகைப்படமாக இது மாறிவிட்டது. என் நண்பன், அவனது திருமண அழைப்பிழை கொடுக்க வந்த இந்த தருணத்தை என்னால் நம்பவே முடியவில்லை. ஆர்யா - சாயிஷா காதலோடு மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்