கடந்த சில தினங்களாக, நடிகை ராய் லட்சுமி கர்ப்பமாக இருக்கிறார் என்று ,சமூக வலைத்தளங்களில் ஒருசிலர் வதந்தியைக் கிளப்பிவிட்டுள்ளனர்.
முதலில் அதிகமாக இதை பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்ளாத ராய் லட்சுமி, இப்போது ,இவ்வாறு பொய்யான வதந்திகளைப் பரப்புபவர்களைக் கடுமையாக கண்டித்துள்ளார்.
அதுவும், தனக்கு பலமுறை காதல் ஏற்பட்டு ,அது முறிவடைந்துள்ளது உண்மைதான், ஆனால் என் தனிப்பட்ட விடயத்தில், யாரும் தலையிடுவது எனக்குப் பிடிக்காது.
நான் ஆசையாக மாங்காய் சாப்பிட்டதை, யாரோ ஒருவர் பார்த்து விட்டு ,அதை கர்ப்பத்துக்காகத் தான் சாப்பிடுகிறேன் என்று நினைத்து, ஒரு வதந்தியைப் பரப்பிவிட்டுள்ளார்.
இது இவ்வாறு தொடர்ந்தால் ,நிச்சயம் நீதிமன்றம் செல்வேன் என, கடுமையாக ,மிகவும் ஆவேசமாகப் பேசி எச்சரித்துள்ளார் நடிகை ராய் லட்சுமி.