Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
28
தமிழ் மன்னனின் கதைக்களத்தோடு பிரம்மாண்டமாய் களமிறங்கும் ''கிரிவெசிபுர''

SooriyanFM Gossip - தமிழ் மன்னனின் கதைக்களத்தோடு பிரம்மாண்டமாய் களமிறங்கும் ''கிரிவெசிபுர''Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,941 Views
அவ்வப்போது நமது இலங்கை சினிமாவுலகிலும் புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமை ஆரோக்கியமான அம்சமெனலாம். அதிலும், தரமான படங்கள் திரைக்கு வருகையில், அவற்றுக்கு கைகொடுக்க வேண்டிய கடமை நமது.

அந்த வகையில், நமது கலைஞர்களின் சிரத்தையான படைப்பாக வெளிவரவுள்ளது, நமது மறைந்து போன கலாசார பண்பாட்டு அடையாளங்களை கொண்டுவரும் கிரிவெசிபுர திரைக்காவியம். 
இந்நிலையில், இலங்கையின் கடைசித் தமிழ் மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனின் வாழ்க்கை வரலாற்றை இதுவரை இலங்கைத் திரையுலகம் கண்டிராத வகையில் பெரும் பொருள்செலவில் தயாரித்துள்ளார், சிங்கள சினிமாவுலகின் இயக்குநர் தேவிந்த கோங்கஹகே அவர்கள். 

இப்படத்தில், சிங்களர் - தமிழ்த் திரைக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றியுள்ளார்கள். கண்டி மன்னன்தான் இலங்கையின் கடைசி சிங்கள மன்னன் என்று நிலவி வந்த கருத்தைப் பொய்யாக்கி, தமிழ்ப் பேசும் மன்னரான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன்தான் கடைசி மன்னன் என்ற வரலாற்று உண்மையை முதல் முறையாக `கிரிவெசிபுர’ என்ற திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் கொண்டுவரும் முயற்சியாக இது அமைந்துள்ளது. 

அதாவது, கிரிவெசிபுர என்றால், மலைவாழ் மக்கள் வாழும் இடம் என்று அர்த்தம். 

நமது நாட்டில் ஒரு கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படுவதைத்தான் பெரிய பட்ஜெட் படம் என்று சொல்வார்கள். ஆனால், `கிரிவெசிபுர' 13 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் `பாகுபலி'யைக் குறிப்பிடுவதுபோல் `கிரிவெசிபுர'வை பிரமாண்டமான படம் என்று இரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். 

மேலும், சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. இலங்கையைக் கடைசியாக ஆண்டது, தமிழ் மன்னன்தான் என்று வரலாற்று ரீதியாக நிறுவவுள்ள இப்படத்தை, சிங்களரே இயக்கியுள்ளதால், வெளிவந்த பின் சிங்கள அமைப்புகள் எதிர்ப்புக்களைக் கிளப்ப வாய்ப்பிருப்பதாக சொல்லபப்டுகிறது. இருப்பினும், இப்படம் தடைகளைக் கடந்து வெளிவந்து வெற்றிகளைக் குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

இந்தப் படத்தில் சிங்கள சினிமாவின் பிரபல நடிகர் புபுது சதுரங்க ராஜசிங்கனாக நடிக்க, தமிழ், சிங்களமென இரு மொழிகளிலும் கலக்கும் நமது நடிகை நிரஞ்சனி ஷண்முகராஜா அரசியாக நடித்துக் கலக்கியிருக்கிறார்.

அத்துடன் தமிழக கலைஞர்களான ஜோலியானா ஜான் பிலிப், நவயுகா, எல்ரோய் அமலதாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

மேலும், நம் நாட்டின் பாடலாசிரியர் அஸ்மின் இந்தத் திரைப்படத்தில் இடம்பெறும் தமிழ் பாடலொன்றையும் எழுதியிருப்பது இன்னும் சிறப்பு. 

இவைகளோடு,``படத்தில் மூன்று மொழிகளையும், மும்மதங்களையும் சார்ந்தவர்கள் பணியாற்றியுள்ளார்கள். தமிழ், சிங்களம், ஆங்கிலம் மூன்று மொழிகளும் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாடல்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளன. 

அதனால், இத்திரைப்படம் இலங்கையில் சமூக நல்லிணக்கத்திற்கு உந்து சக்தியாக அமையும் என்றும் இயக்குனர் குறிப்பிட்டுள்ளதோடு, எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது இந்த கிரிவெசிபுர திரைக்காவியம். 

படக் குழுவினருக்கு, சூரியனின் இனிய வாழ்த்துக்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top