பொலிவுட்டில் உள்ள பிரபல காதல் ஜோடிகளில் ஒன்று சயிப் அலிகான்- கரீனா கபூர் ஜோடி. பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 2012ல் திருமணம் செய்து கொண்டனர். இருந்தாலும் இவர்களின் காதல் இன்னும் குறையவில்லை.
தங்கள் காதல் காட்சிகளில் ஒன்றை கரீனா கபூர், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறினார். தஷான் படத்திற்காக கிரீஸில் ஒரு பாடலை படமாக்க நாங்கள் சென்றிருந்தோம். அப்போது ஒரு நாள் காலை எழுந்தவுடன் நாம் திருமணம் செய்து கொள்ளலாம், நான் உன்னை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று சயிப் அலிகான் என்னிடம் தெரிவித்தார்.
கிரீஸிலேயே திருமணம் செய்யலாம். உடனே ஒரு தேவாலயத்திற்கு சென்று திருமணம் செய்யலாம் என்றார் சயிப். உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா என்று உடனே நான் கேட்டேன். அதற்கு அவரோ அதெல்லாம் தெரியாது, உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று மட்டும் தான் கூறினார். நான் என் கணவரை தீவிரமாக காதலித்தேன், காதலிக்கிறேன், காதலிப்பேன் என்றார்.