கவிப்பேரரசு வைரமுத்து மீது சின்மயி கொடுத்த பாலியல் புகார் தொடர்பில் வெடித்த சர்ச்சைகளை தொடர்ந்து அவர் மீது புகார் கொடுத்தற்காக தமிழ் சினிமாவில் தனக்கு தடை விதித்து விட்டார்களென்றும் அதற்கு தீர்வு பெற்று தருமாறும் மத்திய அமைச்சர் மேனகா காந்தியிடம் சின்மயி பெரும் புகார் அளித்துள்ளார்.
வைரமுத்து தொடர்பில் பின்னணி பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி வழங்கிய இப்பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் சின்மயிக்கு ஆதரவாகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் விமர்சனங்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து நடிகர் ராதாரவி தலைமையிலான டப்பிங் கலைஞர் சங்கம் சின்மையை திடீரென்று நீக்கியுள்ளது.இதனால் முன்னணி ஹீரோயினிகளுக்கு தன்னால் டப்பிங் பேச முடியாமல் இருக்கின்றார் நடிகை சின்மயி.
இதனால் தீர்வு பெற்று தருமாறு நடிகை சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தியிடம் புகார் அளித்துள்ளார்.