பேஸ்புக் இல் விரைவில் Clear History option நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் பேஸ்புக் பாவனையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டிருந்தது. அத்தோடு பகிரங்கமாக மன்னிப்பும் கோரியது. உலகளாவிய ரீதியில் 200 கோடிக்கும் அதிகமானோர் முகநூல் பாவனையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பேஸ்புக் என்பது வெறுமனே பொழுதுபோக்கு சாதனமாக மாத்திரம் அல்லாமல் விளம்பர தளமாகவும் தற்போது இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. சிறு சிறு வியாபார ஸ்தலங்கள் தொட்டு பெரிய பெரிய நிறுவனங்கள் வரை இப்போது பேஸ்புக் ஐ விளம்பரத்தளமாக மாற்றிக்கொண்டுள்ளது.
இணையத்தில் நாம் ஏதோ ஒரு பொருள் குறித்து தேடினாலோ அல்லது பேஸ்புக் இல் வரும் விளம்பரங்களை click செய்தாலோ அது தொடர்ந்து நம்மை துரத்திக்கொண்டே இருக்கும். நாம் எந்த இணையத்தின் பக்கத்திற்கு சென்றாலும், நாம் தேடிய பொருட்களின் விளம்பரங்கள் வந்துகொண்டே இருக்கும்.
இதற்கு காரணம் நாம் பேஸ்புக் இல் மேற்கொள்ளும் ஒவ்வொரு தேடலும் ஒரு history போல பதிவாகும். அதனை வைத்துக்கொண்டுதான் மூன்றாம் தரப்பு விளம்பர நிறுவனங்கள் நம்மை குறிவைக்கின்றன. இது ஒரு விளம்பர உத்தி என்று குறிப்பிட்டாலும், பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், Clear History option ஐ கொண்டுவரவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த option ஐ நடைமுறை படுத்துவதன் மூலம் மூன்றாம் தரப்பு விளம்பர நிறுவனங்களாலும் சரி இணையப்பக்கங்களினாலும் சரி உங்கள் தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ள முடியாது.
ஒருமுறை உங்களது history delete செய்யப்பட்டால் சேமிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் அழிந்துவிடும் . இந்த Clear History option விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி பார்சிலோனாவில் இடம்பெற்ற தொலைத்தொடர்பு ஊடகங்களுக்கான ஆலோசனைகூடத்தில் தெரிவித்துள்ளார்.