பூஜா ஜவேரி இரண்டு தமிழ் படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தொடரி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.
இந்த நிலையில் நடிகர் அதர்வா மற்றும் பரத்துக்கு ஜோடியாக தமிழ் படங்களில் பூஜா ஜவேரி நடிக்கிறார் என்று கூறப்படுகின்றது. தெலுங்கில் முன்னணி கதாநாயகியான பூஜா ஜவேரி தொடரி படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படத்தில் சிறிய வேடம் ஒன்றில் நடித்த அவர் தொடர்ந்து அதர்வா, பரத்துடன் தமிழ் படங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பூஜா, விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றது ''துவாரகா''. இந்த படத்தை அர்ஜூன் ரெட்டி என்ற பெயரில் தமிழில் எதிர்வரும் 15ந் திகதி வெளியாகிறது. இந்த படத்தை ஏ.என்.பாலாஜி தமிழ் வெளியிடுகிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் ஏ.என்.பாலாஜி தெரிவிக்கையில், விஜய் தேவரகொண்டாவுக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் பெருகி வருகிறார்கள்.
தமிழில் வசனத்தை அன்ரனி ரிச்சர்டும், பாடல்களை நெல்லை பாரதியும் எழுதி இருக்கிறார்கள். அத்துடன், பாடல்கள் நேரடி தமிழ் படங்களின் பாடல்கள் போன்று சிறப்பாக அமைந்து இருப்பதாக, பாராட்டுகள் குவிகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.