புதுப்பேட்டை திரைப்படத்தில், ஜோடி சேர்ந்து நடித்த தனுஷ்- ஸ்னேகா, 13 வருடங்களின் பின், மீண்டும் இணையும் திரைப்படம் தான், இயக்குனர் துரைசெந்தில்குமார் கொடுக்கப் போகும் திரைப்படம்.
நம்ம சுள்ளானுக்கு, இந்தத் திரைப்படத்தில், இரட்டை வேடமாம்.
அதாவது, அப்பா- மகன் கதாபாத்திரம்.இதில், அப்பா தனுஷுக்குத் தான், ஸ்னேகா ஜோடியாம்.மகனுக்கு, இன்னுமொரு முன்னணி கதாநாயகி ஜோடி என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே, துரைசெந்தில்குமார் இயக்கிய கொடி திரைப்படத்தில் ,சுள்ளானுக்கு அண்ணன் - தம்பி வேடம். இதில் அப்பா மகன் கதாபாத்திரம்.
அதிகமாக சமூக வலைத்தளங்கள் பேசப்படும் விடயம் ,இது 'கொடி பாகம் இரண்டா? அல்லது முற்றிலும் புதிய கதையா? என.பொறுத்திருந்து பார்க்கலாம்.