இசையமைப்பாளருடன், மேடையில் சண்டையிட்ட நடிகை
SooriyanFM Gossip - இசையமைப்பாளருடன், மேடையில் சண்டையிட்ட நடிகைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
"க்ரைம் திரில்லர்" என, அசத்தலாக 8ம் திகதி இந்தத் திரைப்படம் வெளிவரவுள்ளது.இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன் போது, இசையமைப்பாளர் அம்பரீஷ் உரையாற்றியபோது, "இசையமைக்க அழைத்த போது சந்தோஷப்பட்டேன்.என்னால் முடிந்தளவு, நல்ல பாடல்களைக் கொடுத்தேன்.ஆனால் ,என் பாடல்கள் எதுவும் திரைப்படத்தில் இடம்பெறவில்லை.கதை மிகவும் வேகமாக, அதிரடியாக செல்வதால், என் பாடல்களை இணைக்கவில்லை என்பதை நான் புரிந்துகொண்டேன். பின்னணி இசையும் இன்னொருவர் தான் கொடுத்திருக்கிறார்.அதுமட்டுமில்லாமல், கதாநாயகிக்கும் என்னைப் போல் எந்த வேலையும் இல்லை திரைப்படத்தில்.கதாநாயகனுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படம் இது.இருப்பினும், சிருஷ்டி அருமையாக நடித்துள்ளார்" என்று கூறியுள்ளார்.
இவ்வாறு கூறியதால், கோபம் கொண்ட கதாநாயகி, மேடையில் வைத்தே இசையமைப்பாளருடன் சண்டை போட்டு கத்தியுள்ளார்.பின்னர் ஒருவாறு சமாதானம் ஆகி சகயமாகப் பேசியுள்ளனர்.