பிக்பொஸ் மூலம் பிரபலமானவர் நடிகர் ஹரிஸ் கல்யாண். பிக்பொஸிற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பொஸ் தான் அவருக்கு சினிமாவில் அடுத்த இடத்தை பெற்று தந்தது.
அந்த பிரபலத்தால் தான் 'பியார் ப்ரேமா காதல்' என்ற படம் ஹரிஸிற்கு கிடைத்தது. இப்படம் ஓரளவு ஓடியதால் தான் அவருக்கு மீண்டும் 'இஸ்பீட் ராஜாவும் இதயராணி' என்ற பட வாய்ப்பு கிடைத்து நடித்து முடித்துள்ளார்.
இதன் டிரைலர் சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்ததில் உதட்டோடு உதடு முத்த காட்சிகள் தான் அதிகம் இருந்தது என்று ரசிகர்கள் கூறியதாகவும், ஏன் அவர்கள் அப்படியொரு முத்தம் கொடுக்க மாட்டார்களா?, நாங்கள் நடப்பதை தான் படத்தில் வைத்துள்ளோம் என்று வெறுப்பாக கூறியுள்ளார் ஹரிஸ் கல்யாண்.