சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான "விஸ்வாசம்", ரஜினியின் "பெட்ட"யுடன் போட்டிபோட்டு ஒரு கலக்கு கலக்கியது .
விஸ்வாசத்திற்கு தமிழகத்தில் பெரும் ஆதரவு கிடைத்தது, விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என பலருக்கும் நல்ல இலாபமீட்டினார்கள். படத்தின் வசூல் கணக்குகள் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கூறும்போது , “இத்திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 125 கோடி ரூபா முதல் 135 ரூபா கோடி வரி வசூல் செய்துள்ளதாகவும் , விநியோகிஸ்தர்களின் பங்கு 70 கோடி ரூபா முதல் 75 கோடி ரூபா வரை எட்டலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங் மார்ச் முதலாம் திகதி வெளியானது. ஆனாலும் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால் படம் தோல்வியை சந்திக்கும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளார்கள். படம் வெளியான 2 நாட்களின் மொத்த வசூலே 1 கோடிக்கும் குறைவு தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை அஜித் நடித்த படங்களின் தெலுங்கு டப்பிங் பெரிய அளவுக்கு வரவேற்பு பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது . இந்த செய்தி அஜித் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது