இந்தியாவின் கோவை அரசாங்க மருத்துவமனையில், ஒரே பிரசவத்தில், மூன்று பெண் குழந்தைகள் பிறந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
கோவையில் உள்ள, காந்திபுரத்தைச் சேர்ந்த 28 வயதுடைய சுரேஷ்பாபு சிந்து, என்ற பெண் கடந்த 2ம் திகதி பிரசவம் பார்ப்பதற்காக கோவை அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில், நேற்றுக்காலை, பிரசவ வலி ஏற்பட்டதால், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. மூன்று பெண்குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் பிறைந்தமை, குறித்த மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும் அப்படி ஒரு சந்தோசம்.
இந்தநிலையில், கோவை மருத்துவமனையின் டீன் கருத்து தெரிவிக்கையில், சிந்துவுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டு, அவர் மூன்று பெண் குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருப்பது கண்டறியப்பட்டது.
உடனே சிந்துவிற்கு இரும்புச்சத்து மருந்துகள் வழங்கப்பட்டு, மிகவும் கவனமாக சிகிச்சை அளித்தோம். கோவை அரசாங்க மருத்துவமனையில், சுமார் மூன்று ஆண்டுகளாக, ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறக்கவில்லை.
ஆனால் சிந்துவோ மூன்று குழந்தை பிரசவிக்க தாயாராக இருந்தார். அவருக்கு பிரசவம் பார்ப்பது மிகவும் கஸ்ரமான காரியம். எப்படி இருப்பினும் சிந்து சுகமாக குழந்தைகளை பிரசவித்துள்ளார் .
இதனிடையே, மூன்று பெண் குழந்தைகள் பிறந்ததை கொண்டாடும் வகையில், மருத்துவமனையில், 'கேக்' வெட்டி மருத்துவமனை நிர்வாகம் தமது சந்தோசத்தை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.