இந்தியாவிற்கு செல்லும் அமெரிக்கர்கள் காஷ்மீருக்கு செல்லவேண்டாம் என்று, அமெரிக்கா கட்டுப்பாடு விதித்துள்ளது
இந்த அறிவிப்பு தொடர்பில் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்டீவ் தெரிவிக்கையில், இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமும் பயங்கரவாதமும் நிலவுவதால், காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம். பயங்கரவாதிகள் எந்தவித அறிவிப்பும் இன்றி பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுற்றுலாத் தளங்கள் , வணிகஸ் தலங்களில் தாக்குதல்கள் மேற்கொள்ளக்கூடும். ஆகவே ஆயுத மோதல் நடைபெறக்கூடிய ஏது நிலை இருப்பதால், இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 km தூரத்திற்குள் யாரும் பிரவேசிக்க வேண்டாம் என்று அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.