திருமணத்தின் பின்பு,ஜோதிகா தெரிவு செய்யும் திரைப்படங்கள் யாவும் ஏதோ ஒரு செய்தியை சமுகத்திற்கு மற்றும் பெண்களுக்கு சொல்லும் வகையில் அமைந்திருந்தமை அனைவராலும் வரவேற்கத்தக்கதாக அமைந்திருந்தது.
அந்த வகையில் அடுத்ததாக எஸ்.ராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தில் ஜோதிகா நடிப்பதாகவும் அந்த திரைப்படத்திற்கு ராட்சசி என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திர வேடத்தில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி ஆகியோர் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கல்யாண் இயக்கத்தில் ஓர் திரைப்படத்தில் நடித்து வரும் ஜோதிகா, அடுத்ததாக ஜித்து ஜோசப் இயக்கத்தில் படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
எத்தனை திரைப்படங்களை ஜோதிகா நடித்தாலும் ,அவருடைய படத்தில் முக்கியமான ஒரு சமூக செய்தி ஒன்று இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.