இந்தக் கோடை காலத்தில் உங்கள் கூந்தலை பராமரிப்பது தொடர்பில் உங்களுக்கு என்னனென்ன விடயங்கள் தெரியும்? சரியான பராமரிப்பு இல்லை என்றால் உங்கள் கூந்தல் உங்களிடம் இருந்து சென்றுவிடும். இதற்கு நாம் சில வழிமுறைகளை செய்தே ஆகவேண்டும். கோடை கால வெயில் கடுமையாகப் இருப்பதால் ரசாயனம் கலந்த டை, ஷாம்பு போன்றனவற்றை தவிர்த்தால் நன்று என்று வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றார்கள். உங்கள் தலைமுடிக்குப் புற ஊதாக் கதிர்கள் நல்லதல்ல. அதிக சூரிய வெப்பம் தலை முடியை உலர் தன்மையுடன், முனைகளை உடைத்து, ஒளிர்த் தன்மையை இழக்க வைக்கும்.
வெயில் பாதிப்பில் இருந்து உங்கள் கருமையான கூந்தலை பாதுக்காக்க தலையை துணி அல்லது தொப்பியால் நன்றாக மூடி மறைத்துக் கொள்ளவும். இது புற ஊதாக் கதிர்களிலிருந்து கூடுதல் பாதுகாப்பைத் தருவதுடன், ஈரப்பதத்தை இழக்காமல் தக்க வைக்கும். வெயில் அதிகம் உள்ள இந்த நாட்களில் நீச்சல் குளத்தில் குளிக்கும் நீங்கள் சில விடயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
நீச்சல் குளங்களில் தண்ணீரில் கலக்கப்படும் உப்பும், ரசாயனமும் உங்கள் தலைமுடியைப் பாதிக்கும். எனவே கோடைக் காலத்தில் தலை முடியை மிருதுவாக மென்மையாகப் பாதுகாக்கவும். நீந்துவதற்கு முன்பும், பின்பும் தலைமுடியைத் தண்ணீரில் அலசுவது நல்லது. சிலர் தலைமுடியை நன்றாக பின்னி வைத்துக்கொள்வார்கள். இதுவும் இந்த கோடை காலத்தில் நல்லது என்று கூறுகிறார்கள்.
கோடைக்கால வெப்பமும் சூரியக் கதிர்களும் உங்கள் தலைமுடியைச் சேதப்படுத்தும். கோடை நேரங்களில் ப்ளோ டிரையர்களைத் தலைமுடிக்குப் பயன்படுத்தக் கூடாது என்பது முக்கியமானது. எனவே முடிந்த வரை ஃப்ளாட் ஐயன் அல்லது curly - ஐயன் ஆகியவற்றைத் தவிர்த்து விடுங்கள். இந்த வெப்ப நாட்களில் தலைமுடிக்கு தேங்காய், ஒலிவ், அவகடோ எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
இவை உங்கள் தலையை குளிர்ச்சியாக வைத்திருக்கும். கோடைக் காலத்தில் உங்கள் உடல் நலத்துக்கு ஏற்ற வகையில் உணவுப் பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொள்ளுங்கள். நல்ல நடைமுறைகளை நாம் பின்பற்றினால் இனி எல்லாம் சுபமே............!