குறித்த நிபந்தனை என்னவென்றால், நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் ஹைஹீல்ஸ் அணிந்துதான் வேலைக்கு வரவேண்டும் என்பதே. இந்த நிபந்தனை தொடர்பில் ஒரு சமூக வலைதள நிறுவனம், நடத்திய கருத்துக் கணிப்பில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்திட்டுளார்கள்.
இந்த நிலையில், யூமி இஷிகாவா என்ற பிரபல விளம்பர மொடல், தினமும் ஹீல்ஸ் அணிவதால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதைத் தெரிவித்து ட்வீட் வாயிலாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு ஒரு லட்சம் லைக்குகள் அல்லது ரீட்வீட்கள் பகிரப்பட்டதாக கணிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பதிவில், எப்போதாவது சில நாளில் ஹீல்ஸ் அணிவதையே நான் வெறுக்கிறேன். அப்படியிருக்க வேலைக்குச் செல்லும் நாட்கள் முழுவதும் இதை அணிந்துகொண்டு நான் காயப்பட வேண்டுமா? காயத்தோடு நான் ஏன் வேலை செய்யவேண்டும்?'' என்று, இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்.
பின்னர் இவரே #KuToo என்ற பெயரில் ஹேஷ்டேக் உருவாக்கினார். இதற்கு -- குத்ஸ்சுவின் கலவை 'kutsu' (ஜப்பானிய ஷூ வகை), குத்சூ 'Kutsuu' (வலி) ஆகிய பொருட்களின் சுருக்கமாக இந்த ஹேஷ்டேக் அமைந்தது. மேலும் #MeToo இயக்கத்தின் மறுஉருவாக்கமாகவும் இது அமைந்தது. இதற்கு ஏராளமான பெண்கள் தமது கருத்துக்களை பதிவிட்டுளார்கள். அது மாத்திரமன்றி தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.
அவர்களில் சிலர் தங்கள் கால்களில் High heel தினமும் அணிந்துகொள்வதால் ஏற்படும் காயங்கள் உள்ள படங்களைக்கூட அதில் இணைத்திருந்தனர். பின்னர் இஷிகாவா Change.org இணையதளத்தைத் தொடங்கினார். அதில் பெண்கள் ஹைஹீல்ஸ் அணிந்து வர வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கும் நிறுவனங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் தொடங்கினார்.
இதனிடையே, ஜப்பானில் பெரும்பாலான நிறுவனங்கள், தங்களிடம் பணியாற்றுபவர்கள் என்ன உடை அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஆண்கள் சூட் அணிந்து கருப்பு வண்ண ஷூக்களை அணிந்து வர வேண்டும். பெண்கள் ஸ்கர்ட்ஸ் எனப்படும் குட்டைப் பாவாடை அணிந்து ஹைஹீல்ஸ் அணிந்து வர வேண்டும் என்பது கட்டாய விதிமுறையாகும்.
ஜப்பானில் தற்போது முளத்திற்கு ஒரு நிறுவனம் முளைப்பதனால் சிற்சில நிறுவனங்கள் தற்போது நிபந்தனைகளைத் தளர்த்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.