Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
21
வெயில் தாக்கத்தினால் நான்கு மாவட்டங்கள் எச்சரிக்கை வலயங்களாக பிரகடனம்

SooriyanFM Gossip - வெயில் தாக்கத்தினால் நான்கு மாவட்டங்கள் எச்சரிக்கை வலயங்களாக பிரகடனம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,536 Views
உயர்வடைந்து வரும் வெப்பநிலைக் காரணமாக இன்று புத்தளம், மன்னார், கம்பஹா மற்றும் குருணாகல் ஆகிய நான்கு மாவட்டங்களையும் வானிலை அவதான நிலையம் தீவிர எச்சரிக்கை பகுதிகளாக அறிவித்துள்ளது.

அத்துடன், மேற்படி நான்கு மாவட்டங்களிலும் 32 முதல் 41 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருக்குமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிதீவிர உஷ்ண நிலை காரணமாக உடல் உபாதைகள் ஏற்படுவதுடன், Sun Stroke (பக்கவாதம்) போன்ற நோய்கள் உருவாக வாய்ப்புள்ளதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் தேவையானளவு நீர் அருந்துவதுடன் நிழலான இடங்களில் இருக்க வேண்டுமென்றும், வயதானவர்கள் மற்றும் நோயாளர்களிடத்தே கூடுதல் கவனம் தேவையென்றும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில், இன்று பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கத்திற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்தில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், அதிகரித்து வரும் கடுமையான வெப்பநிலையிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வது அவரவர் பொறுப்பு என்பதுடன், இதன் மூலமான நோய்ப்பரவளையும் தடுப்பதற்கான வழிமுறைகளையும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் சுகாதார பிரிவு மக்களைக் கோரியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top