Google நிறுவனம் 11, 643 கோடி இந்திய ரூபாய்களை அபராதம் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல இணையதள நிறுவனமாக Google செயற்பட்டு வருகின்றது. இணையதளத்தை மக்கள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் android நிறுவனத்தின் செயல்பாட்டு முறையை, சட்ட விரோதமாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இவ்வாறு Google நடந்ததன் காரணமாக, கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் 35 கோடி இந்திய ரூபாய்களை அபராதமாக விதித்தது. இதற்கு முன்னர் கூட, ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டி ஒழுங்குமுறை ஆணையம், கூகுள் நிறுவனத்திற்கு 18, 915 கோடி இந்திய ரூபாய்களை அபராதமாக விதித்தது.
இந்நிலையில் Brussels நகரில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் 3வது முறையாக Google நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கின்றது.