சூரிய ஒளி வெயிலில் இருந்து விட்டமின் டி சத்து நம் உடலுக்கு கிடைக்கின்றது என்பது நாம் அறிந்தது.இதனை சிறு வயதில் நாம் படித்திருக்கின்றோம்.நம் எலும்பு பற்கள் தசைகளில் வளர்ச்சிக்கு விட்டமின் டி உதவுகின்றது.எந்தவொரு செயற்பாடும் அதிகமாக கிடைத்தால் ஆபத்துதான்.வெயில் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்
செரொடோரின் எனும் ஹோர்மோனானது வெயில் காலத்தில் மட்டுமே நம் உடலில் சுரக்கப்படுகின்றது.
கொஞ்சம் வெள்ளையான சருமம் கொண்டவர்களுக்கு சூரிய ஒளியானது வெயில் காலத்தில் ஒரு நாளைக்கு இருபது நிமிடம் போதுமானது.ஆனால் கருப்பான நிறம் கொண்டவர்களுக்கு ஆறு மடங்கு நேரம் கூடுதலாக சூரிய ஒளி உடலுக்கு தேவைப்படலாம்.
உங்கள் நிழலை பார்த்தே வெயிலின் உக்கிர அளவினை நீங்கள் கணித்துக்கொள்ளலாம்.உங்கள் நிழலானது உங்களை விட சிறிதாக இருந்தால் புற ஊதாக்கதிர்கள் அளவு அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.
தேவையை விட கிடைக்கும் குறைந்தளவு சூரிய ஒளியானது நமக்கு உறக்கம், இதயகோளாறு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.உங்கள் சருமத்தில் புற ஊதா கதிர்கள் பட்டால் ஆரம்பத்தில் சிறிதளவிலான பிரச்சினைகளை உருவாக்கும். இது தொடருமானால் தோல் புற்று நோய் ஏற்பட வாய்ப்புண்டு.
உங்கள் சருமத்தில் வெயிலினால் ஏதாவது மாற்றம் தென்படுவதனை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை நாடவும்.காரணம் சில வேளைகளில் அது சரும பிரச்சினையாக இருக்கும் பட்சத்தில் ஆரம்பத்திலேயே சிகிச்சை கொடுத்து ஆயுட்காலத்தை நீடித்துக்கொள்ளலாம்.