அயர்லாந்தில் உள்ள தாய் ஒருவர், தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த போதே, அகால மரணம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேரி டவுனி என்ற குறித்த பெண், அண்மையில் ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.
இதனை அடுத்து, மேரி டவுனி குழந்தைக்கு மருத்துவமனையில் இருந்தபடியே தாய்ப்பால் கொடுத்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது.
இதனால் கையில் இருந்த தனது குழந்தையை, கீழே வீசியுள்ளார். மேரி டவுனிக்கு வலிப்பு ஏற்பட்ட போது, அவரை எந்த மருத்துவரோ, தாதியரோ அவதானிக்கவில்லை. மேரி டவுனி இறந்த பின்னரே, மருத்துவர் அவரது அறைக்குள் நுழைந்துள்ளார்.
மேலும் அங்கு விரைந்த மருத்துவர்கள் குழந்தையை மீட்டு தீவிர சிகிச்சையளித்த போதிலும், சிகிச்சை பலனில்லாமல் குழந்தையும் உயிரிழந்தது. இந்த சம்பவம் மருத்துவமனையில் இருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.