உலகில் முதன்முறையாக அமெரிக்க மருத்துவர்கள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியிடம் இருந்து, சிறுநீரகத்தை தானமாகப் பெற்று, இன்னொருவருக்குப் பொருத்தியுள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில், உலகளவில் பொது சுகாதாரத்தில் மிகவும் சவாலாக இருக்கும் நோய்களில் ஒன்று தான் எச்.ஐ. வி.
இந்நிலையில், அமெரிக்காவில் மேரிலாண்டில் பல்டிமோர் நகரத்தில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில், உலகில் முதன்முறையாக அமெரிக்க மருத்துவர்கள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியிடம் இருந்து, சிறுநீரகத்தை தானமாகப் பெற்று, இன்னொருவருக்குப் பொருத்தியுள்ளனர்.
'எச்.ஐ.வியோடு வாழும் ஒருவர் ,சிறுநீரகம் தானம் செய்ய அனுமதிக்கப்பட்டது உலகிலேயே இது தான் முதல்முறை'' என, மருத்துவர் டாரி செஜெவ் கூறியுள்ளார்.
எச்.ஐ.வி. பாதிப்புள்ளவர்களுக்கு ,சிறுநீரக நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றாலும், இதற்கு
ஆன்டி- ரெட்ரோவைரல் மருந்துகள் மூலமாக, தகுந்த சிகிச்சை அளித்து, சிறுநீரகத்தைக் காக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
புற்றுநோயியல் துறை பேராசிரியர் ஒருவர் இது குறித்துக் கூறும் போது, ''இந்த அறுவை சிகிச்சை, மக்களுக்கு எச்.ஐ.வி குறித்த பார்வைகளை நிச்சயம் மாற்றும். மேலும் மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இது பார்க்கப்படும்'' என்கிறார்.
நோயாளிகள் இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் மிகவும் நன்றாகவும், சந்தோசமாகவும் உள்ளனர் எனவும் செய்திகள் கூறுகின்றன.