சயீஷா திருமணம் முடிந்த ஒரு மாதத்திற்குள் மீண்டும் படங்களில் நடிக்க வந்துவிட்டார். ஆர்யா, சயீஷா திருமணம் கடந்த மாதம் 10ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது.
திருமணத்திற்கு சில நாட்கள் முன்பு வரை இருவரும் அவரவர் படங்களில் நடித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் சயீஷா மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். அவர் புனித் ராஜ்குமாரின் யுவரத்னா படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். மகள் மீண்டும் வேலைக்கு திரும்பியது குறித்து ஷஹீன் ட்வீட் செய்துள்ளார்.
யுவரத்னா படம் மூலம் சயீஷா கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார். இதையடுத்து அவர் தனது கணவர் ஆர்யாவுடன் சேர்ந்து டெடி படத்தில் நடிக்கிறார். டெடி படத்தில் சயீஷா தான் ஆர்யா ஜோடியாக நடிக்கிறார். திருமணத்திற்கு பிறகு ஆர்யாவும், சயீஷாவும் ஜோடியாக நடிப்பதால் டெடி படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே அவர்கள் நடித்துள்ள காப்பான் பட ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.