எல்லோராலும் மதிக்கப்பட்ட, போற்றப்பட்ட, பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன், சிறுநீரகக் கோளாறு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,இன்று தன்னுடைய 79 ஆவது வயதில் , சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார்.
இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
உதிரிப்பூக்கள் என்ற திரைப்படம் யாராலும் மறக்க முடியாத, ஏன் தமிழ் திரையுலக வரலாற்றின் ,மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக பேசப்பட்டது.அதுமட்டுமல்லாமல், சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து, முள்ளும் மலரும், ஜானி,கை கொடுக்கும் கை என பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர்.அத்தோடு,நண்டு மற்றும் மெட்டி என பலரால் பேசப்பட்ட திரைப்படங்களையும் கொடுத்தவர்.அதுமட்டுமல்லாமல், தளபதியின் தெறி, சூப்பர் ஸ்டாரின் பேட்ட, விஜய்சேதுபதியின் சீதக்காதி, அதர்வாவின் பூமராங் உள்ளிட்ட பல படங்களிலும் முக்கிய தோற்றத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.
இயக்குனர் மகேந்திரனின் மறைவுக்கு அனைத்து திரையுலகப் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அந்தவகையில் திரைப்பட ரசிகர்கள் சார்பாக சூரியனின் ஆழ்ந்த இரங்கல்களும்.