Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
02
கட்டழகு ஆசையும், கவலை கொள்ள வைக்கும் உடல் வலியும்.

Sooriyan Gossip - கட்டழகு ஆசையும், கவலை கொள்ள வைக்கும் உடல் வலியும்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,524 Views
உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர்களும், உடல் கட்டழகை விரைவாக பெறவேண்டும் என்ற நினைப்பில் கடும் பயிற்சியில் ஈடுபடுபவர்களும் செய்யும் சில தவறான செயன்முறைகளால் உடலில் அதீத வலியையும் பாதிப்பையும் எதிர்கொள்ள நேரிடுமே தவிர, அவர்களின் ஆசை கைகூடுவதில்லை.

உடற்பயிற்சியினை மேற்கொள்ளும்போது, தசை நார்கள் மற்றும் கால், கைகள், இடுப்புப் பகுதிகளிலுள்ள தசையை விரிவுபடுத்தும் செயன்முறை பயிற்சிகளை மேற்கொள்ளும்போது பலரும் வேகமாக செய்வதன்மூலம் தாம் எதிர்பார்க்கும் பலனை பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் வேக வேகமாக பயிற்சி செய்கின்றனர். இப்படி உற்சாகமாக பயிற்சி மேற்கொள்வதனூடாக தசை மற்றும் தசை நார்கள் விரிந்தும், வலுவடைந்தும், நெகிழ்வுப்போக்கும் கொண்டதாக மாறும் என்று தவறான எண்ணம் கொள்கின்றனர்.

தசை மற்றும் தசைநார்களை விரிவுபடுத்துவதற்கான மேற்கொள்ளும்போது, செய்யும் பயிற்சிகளை மிகவும் மெதுவாக செய்யவேண்டும். உடலை குனிந்து நிமிர்ந்து செய்யும் பயிற்சிகள், இடுப்புத் தசைகளை இறுக்கமாக்குதல் (Twisting), அத்துடன் உடலை வளைத்துக் குனிந்து கை விரல்களால் கால் பாதங்களை தொடுவது முதலான பயிற்சிகளை மிக மெதுவாகவே மேற்கொள்ள வேண்டும். அப்படியில்லாமல், வேகவேகமாக இது போன்ற பயிற்சிகளில் ஈடுபட முற்பட்டால், உடல் தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு கடும் வலியுடன் கூடியதாக, தசை நார்கள் கிழிதல் முதலான பாரதூரமான நிலையை உருவாக்கிவிடும்.

அதேவேளை, இவ்வாறான பயிற்சிகளின்போது தசைகளை தளர்வாக வைத்துக்கொண்டு பயிற்சிகளை செய்வதுடன், மெதுவாகவும், அதேநேரம் மீண்டும் மீண்டும் செய்யும்போது தசைகள் வலுவுடன் கூடியதான நெகிழ்வுத் தன்மையையும் எதிர்பார்த்த உடல் கட்டழகையும் பெற முடியும். எது எப்படியோ, எந்தவித உடற்பயிற்சியாக இருந்தாலும் முறையான பயிற்சியாளரின் வழிகாட்டலோடு மேற்கொள்ளுதல் நலம். ஏனெனில், ஒவ்வொருவரின் உடல்நிலைக்கு தகுந்த பயிற்சிகளை முறையான பயிற்றுனரால் மட்டுமே வழங்க முடியும் என்பதே உண்மை.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top