இசையமைப்பாளரும், பாடகரும், நடிகருமான ஜீ.வி.பிரகாஷ், அண்மையில் தமது குப்பத்து ராஜா படக்குழுவுடன் இணைந்து, ரசிகர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய ஜீ.வி.பிரகாஷ், தனது திரைத்துறை பிரவேசத்தில் பல புதுவித அனுபவங்களை பெற்றதாக தெரிவித்தார். அத்துடன், சவால்மிக்க பாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டும் என்ற எண்ணம், அதிகளவில் ஊற்றெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன், யோகிபாபு, பூனம் பாஜ்வா ஆகியோர் நடித்துள்ள ''குப்பத்து ராஜா படம்'' வெகு விரையில் திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் குப்பத்து ராஜா படக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜீ.வி.பிரகாஷ், ''குப்பத்து ராஜா கதையை கேட்டதுமே தனக்கு பிடித்தது. அதனால் நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்த படம் அதிரடியாக தயாராகி உள்ளது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் என்னை இசையமைப்பாளராக அறிந்த பார்த்திபன் இந்த படத்தில் எனது நடிப்பை வியப்போடு பார்த்து ரசித்து பாராட்டினார்.