தாம்தூம் படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானவர் கங்கனா ரணாவத் இவருக்கு தமிழில் நல்ல எதிர்காலம் இருக்கும் என எதிர்ப்பார்த்தபோதும் வாய்ப்பு வரவில்லை.
அவர் மீண்டும் தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் நடிக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் இந்த படம் தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளிவரவுள்ளது ஹிந்தியில் ஜெயா என்ற பெயரில் வெளியாகிறது.
இந்த படத்திற்காக ஜெயலலிதா பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு தன்னை தயார்படுத்தி வரும் கங்கனா ரணாவத், இரண்டு விதமானக நடிக்கவுள்ளாராம்.
ஜெயலலிதா நடிகையாக இருந்தபோது உள்ள காட்சிகளுக்கு கங்கனா இப்பொது இருப்பது போலவே நடிக்கவும், அரசியலுக்கு வந்த பிறகு நடந்தவற்றை படமாக்கும்போது உடல் பருமனை அதிகமாக்குவதற்கும் திட்டமிட்டுள்ளாராம் கங்கனா.