80 களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, கார்த்தி ஆகிய பிரபல நடிகர்களுடன் நடித்தவர் நடிகை அமலா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என சினிமா படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா.
தமிழில் 'மைதிலி என் காதலி' படத்தில் தொடங்கி கடைசியாக 1991 ல் கற்பூர முல்லை படத்தில் நடித்திருந்தார். பின்பு தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் நாகர்ஜூனாவை திருமணம் செய்துகொண்டார்.
தெலுங்கில் 2014 ல் சமந்தா, நாக சைதன்யா நடித்திருந்த மனம் படத்தில் டான்ஸ் டீச்சராக நடித்திருந்தார். 4 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் 'High priestess' என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்குகிறார்.
இந்த படம் 25 ம் திகதி வெளியாகும் என, படக்குழு அறிவித்துள்ளது.