சென்னையிலுள்ள பிரபல தனியார் பள்ளியில் பணியாற்றி வந்த இளம் ஆசிரியர் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் நீலாங்கரை பகுதியில் உள்ள பள்ளியில் பணியாற்றிய அந்தோணி ஜெனிபர் என்ற ஆசிரியரே, இவ்வாறு தற்கொலை கொண்டுள்ளார்.
குறித்த ஆசிரியர், பள்ளியிலுள்ள அறையொன்றில் வைத்து யாரும் இல்லாத வேளையில், தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. எனினும் தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
குறித்த அறைக்குள் நுழைந்த மாணவர்கள், ஆசிரியரைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், அங்கு விரைந்த காவல் அதிகாரிகள், ஆசிரியரின் உடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.