பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூர்யாவின் மாஸ் திரைப்படம் கோடை சூட்டோடு சூடாக பட்டையை கிளப்ப வருகிறது ..ஏற்கனவே தணிக்கை சபைக்கு அனுப்பப்பட்ட இத்திரைப்படம் 'u' சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் மே 29 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வெளியிடப்படவுள்ளது
இத்திரைப்படத்தில் நயன்தாரா , பிரனிதா ஆகியோர் சூரியாவோடு ஜோடி சேர இருப்பதோடு ஜெயராம், பார்த்தீபன், சமுத்திரகனி, கருணாஸ், பிரேம்ஜி அமரன் ஆகியோரும் முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்கின்றனர் ..இத்திரைப்படத்தை சூர்யாவின் 2D Entertainment மற்றும் Studio Green ஆகியவை இணைந்து தயாரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது ..இதேவேளை இத்திரைப்படத்தை இயக்கம் வெங்கட் பிரபு கருத்து தெரிவிக்கையில் மாஸ் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்படும் special effects நிச்சயம் சிறியோர் முதல் பெரியோர் வரை எல்லோரையும் ஈர்க்கும் என்றார் ...