பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வத்துடன் சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர். இதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் பலர் காலையிலேயே வாக்கை பதிவு செய்தனர்.
“11 மணி நிலவரப்படி அதிகபட்சமாக ஆரணியில் 36.51 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. மத்திய சென்னையில் 22.89 சதவீதம், தென் சென்னையில் 23.87 சதவீதம், வட சென்னையில் 23.36 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்த நிலையில் பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமா ஜுலி தன்னுடைய வாக்கினையும் பதிவு செய்துள்ளார். தன்னுடைய ஜனநாயக கடமையை தான் நிறைவேற்றிவிட்டதாவும் . மக்கள் அணைவரும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்ககை விடுத்துள்ளார்.