Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
20
இது என்னுடைய கதை ; விஜய் படத்துக்கு அட்லீயால் மீண்டும் சர்ச்சை

SooriyanFM Gossip - இது என்னுடைய கதை ; விஜய் படத்துக்கு அட்லீயால் மீண்டும் சர்ச்சைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,039 Views
நம்ம விஜய் படம் எப்பொழுது வெளியாக்கினாலும், ஏதாவதொரு பிரச்சினை பூதாகரமாக வெடிக்கும். இம்முறையும் அப்படி ஒரு பிரளயம் உருவாகியுள்ளது.

அதாவது, நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய் கூட்டணியில் 'தளபதி 63' படம் பிரம்மாண்டமாக கால் பந்தாட்ட மைதானம் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய், பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் கால் பந்தாண்டத்தை மையமாக 256 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து, சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லி இருந்தாகவும், இயக்குநர் செல்வா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் அட்லீ இயக்கும் 'தளபதி 63' படத்தின் கதை தன்னுடைய கதையை ஒத்திருப்பதை அறிந்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் மீது ஆலோசனை நடத்திய சங்கம், உறுப்பினராகி 6 மாதங்கள் ஆனால் மட்டுமே, கதை திருட்டு தொடர்பான புகாரை எடுத்துக் கொள்ள முடியும் என கூறி தன்னுடைய புகாரை நிராகரித்தது.

எனவே 'தளபதி 63' படத்தின் கதைக்கு உரிமை கோரியும், படப்பிடிப்புக்கு தடை விதிக்கக் கோரியும், இயக்குநர் அட்லீ, ஏ.ஜி.எஸ் படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் தென்னிந்திய எழுத்தாளர் சங்கம் ஆகியோரை எதிர்மனுதாராக சேர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு வரும் 23-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top