ஜப்பானில் உலகின் அதிவேக புல்லட் ட்ரெயின் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இது மணிக்கு 400 km வேகத்தில் பயணித்து, வெற்றிகரமாக சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பான் நாட்டில் உலகின் அதிவேக புல்லட் ட்ரெயின்களை ஷின்கான்சென் என்ற நிறுவனம் தயாரித்து வருகின்றது.
அங்கு குறித்த ட்ரெயின்களை இயக்குவதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் அதிவேக புல்லட் ட்ரெயின் எதிர்வரும் 2030 ஆண்டளவில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது மணிக்கு 360 km வேகத்தில் இயக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.