சமந்தாவுக்கு அவரது பெற்றோருடன் தகராறு என்று கொலிவுட்டில் ஒரு பேச்சு உள்ளது. அதற்கெல்லாம் விடைகொடுக்கும் வகையில், தனது தாய் குறித்து சமந்தா ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், ‘எனது தாய் செய்யும் பிரார்த்தனையில் எப்போதும் நான் நம்பிக்கை கொண்டிருப்பேன். அவரது பிரார்த்தனை என் வாழ்வில் மாயாஜாலம் செய்திருக்கிறது. சிறுமியாக இருந்த போது எனக்காக பிரார்த்தனை செய்யுமாறு அவரிடம் நான் கேட்பேன். இப்போதும் அப்படித்தான் கேட்கிறேன். எனது தாயிடம் உள்ள மிகச் சிறந்த பண்பு என்னவென்றால் தனக்கென்று ஒருபோதும் அவர் பிரார்த்திப்பதில்லை.
கடவுளுக்கு அடுத்தபடி அம்மாவைத்தான் சொல்வேன். LOVE YOU அம்மா’ என்று சமந்தா குறிப்பிட்டிருக்கிறார். உருக்கமான இக்கடிதம் மூலம், தனது தாயுடன் மோதல் இருப்பதாக சொல்பவர்களின் வாயை அடைத்திருக்கிறார் சமந்தா.