நெருங்கிய நண்பர்கள், ஆனால் விட்டுக்கொடுக்காமல் விளையாடும் போட்டியாளர்கள்.
மஹேல & சங்கக்கார விளையாடும் காலத்திலேயே மாறி மாறி தங்கள் சாதனைகளை நிகர்த்துக்கொண்டார்கள்.
இப்போது மஹேல எல்லாவிதமான சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். ஆனால் முதல்தரப் போட்டிகளில் விளையாடிவருகிறார்.
குமார் சங்கக்கார ஒருநாள் மற்றும் Twenty 20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுவிட்டார்.
எனினும் இங்கிலாந்தின் பிராந்திய அணியான Surrey க்காக ஆடிவரும் சங்கக்கார தனது இரண்டாவது சதத்தை நேற்று பெற்றிருந்தார்.
இந்த சதத்துடன் தனது 52வது முதல் தர சதத்தை நேற்று பூர்த்தி செய்தார் சங்கக்கார.
இலங்கையின் வீரர்களில் இதுவரை அதிக முதல் தர சதங்களைப் பெற்றிருந்த பெருமைக்குரிய மஹேல ஜயவர்தனவின் சாதனையை சங்கக்கார இதன் மூலம் முறியடித்துள்ளார்.
எனினும் முதல் தரப்போட்டிகளில் மஹேல பெற்றுள்ள ஓட்டங்களின் எண்ணிக்கையை இன்னும் 82 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.
ஆனாலும் சங்கக்காரவின் டெஸ்ட், ஒருநாள் சராசரியைப் போலவே மஹேலவை விட உயர்வாகவே இருக்கிறது.
சங்காவின் சிறப்பான துடுப்பாட்ட form சரே அணிக்கு வரமாக மாறியிருக்கிறது.